சினிமா செய்திகள்
துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
24 Sept 2023 9:27 PM IST

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ஐதராபாத்,

தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் 4 சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்